அடுத்த குடியரசுத் தலைவர் யார்? சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் அதிகாரி முன்பு காலை 11 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனா்.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து, மறுநாள் அனைத்து வாக்குப் பெட்டிகளும் தில்லியில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தேர்தலில் திரெளபதி முா்மு வெற்றி பெறும்பட்சத்தில், நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவியை அடையும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அவா் பெறுவாா்.

தற்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-இல் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-இல் பதவியேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com