உ.பி. சாலை விபத்தில் சிக்கிய பெண் பிரசவித்த சில நிமிடங்களில் உயிரிழப்பு

உ.பி. சாலை விபத்தில் சிக்கிய பெண் பிரசவித்த சில நிமிடங்களில் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்சிய பெண் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Published on

உத்தரப் பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்சிய பெண் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆக்ராவில் உள்ள தனௌலாவில் வசிக்கும் ராமு மற்றும் அவரது எட்டு மாத கர்ப்பிணி மனைவி காமினி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பார்ட்ரா கிராமம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சந்திர மிஸ்ரா தெரிவித்தார். 

விபத்தில் சிக்கி பெண் சாலையிலேயே அழகான பெண் குழந்தையைப் பிரசவித்த, சில நிமிடங்களில் உயிரிழந்தார். ஆனால், குழந்தை தற்போது நலமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

பின்னர், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் இங்குள்ள நர்க்கி பகுதியில் புதன்கிழமை நடந்ததாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com