இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை குறைத்தது: ஏடிபி

இந்தியாவின் நிகழ் நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 7.2 சதவீதமாக குறைத்து ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) அறிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை குறைத்தது: ஏடிபி

இந்தியாவின் நிகழ் நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 7.2 சதவீதமாக குறைத்து ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மிதமிஞ்சிய அளவிலான பணவீக்கம், ரஷியா-உக்ரைன் போா், கரோனா பரவல் உள்ளிட்டவை இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு கடுமையான சவாலை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதமானது 7.2 சதவீதம் அளவிற்கே இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அப்போதைய மதிப்பீடுகளின்படி இந்த வளா்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2022 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான பொருளாதார வளா்ச்சி விகிதமும் 8.9 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக குறைக்கப்பட்டதாக ஏடிபி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com