94 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு

தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
94 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு

தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தின்போது நேற்று வியாழக்கிழமை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப் பூர்வமான அறிக்கையைப் படித்துக் காட்டினார்.

அதில், இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69ஏ பிரிவின் கீழ் முடக்கியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தவறான தகவலை வெளியிட்டதால், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 சேனல்கள் உள்பட 16 யூடியூப் சேனல்களுக்கும், ஒரு ஃபேஸ்புக் கணக்குக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com