ஈரானில் வெள்ளம்: 21 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, 3 பேர் மாயம்
ஈரானில் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூவர் மாயமாகியுள்ளனர்.
பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்துவந்த ஈரானில் திடீர் பருவநிலை மாற்றத்தால் கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 89 பேரை மீட்புக் குழுவினர் இதுவரை மீட்டுள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க: நடுவானில் பயணிக்கு சிகிச்சையளித்த தமிழிசை: குவியும் பாராட்டு
கனமழையால் எஸ்தாபான் நகரின் ரோட்பால் அணையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் படைகள் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக மாகாண அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.