நரேந்திர மோடி / ராகுல் காந்தி
நரேந்திர மோடி / ராகுல் காந்தி

'அக்னிபத்': மோடி ஆய்வகத்தில் புதிய பரிசோதனை -ராகுல் காந்தி

அக்னிபத் திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வகத்தில் புதிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வகத்தில் புதிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆண்டுதோறும் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். ஆனால் அவர்களில் 3 ஆயிரம் பேர் மட்டுமே அரசு வேலைகளைப் பெறுகிறார்கள். 

அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் நான்கு ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த புதிய பரிசோதனை மூலம் நாட்டின் பாதுகாப்பும், இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்துக்குள்ளாகும் என விமர்சித்துள்ளார். 

அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்தில் பணியாற்ற 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.  இத்திட்டத்தின் கிழ் ஆள்சேர்ப்பு நடைபெற்று வந்தாலும், பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com