பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜார்க்கண்டில் 16 வயது பெண் கடத்தல்; 3 மாதங்களாக கூட்டு  பாலியல் பலாத்காரம்

16 வயது பெண் கடத்தப்பட்டு, பூட்டிய அறைக்குள் மூன்று பேரால் கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஜார்க்கண்டில் 16 வயது பெண் கடத்தல்; 3 மாதங்களாக கூட்டு  பாலியல் பலாத்காரம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:23 pm IST


பொகாரோ: பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்த 16 வயது பெண் கடத்தப்பட்டு, பூட்டிய அறைக்குள் மூன்று பேரால் கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் மந்தோஷ், விஷ்ணு குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இவர்கள் யாரையும் தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி, மாணவி காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து தொடர்ந்து தேடும் பணியையும் நடத்தியுள்ளனர். 

காவல்துறையினர் இதில் பெரிய ஆர்வம் காட்டாமல், மாணவியே திரும்பி வருவார் அது வரை காத்திருக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை டிஎஸ்பி கூறுகையில், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பிறகு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெண்ணின் பெற்றோர் கூறுகையில், ஏப்ரல் 19ஆம் தேதி கடைக்குச் சென்ற பெண்ணை மூன்று பேர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர்.

மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததும், அவர்கள் வெளியே செல்லும் போது பெண்ணின் வாய் மற்றும் கையை துணியால் கட்டிவிட்டுச் சென்றுள்ளனர். ஜூலை 19ஆம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் இதனை கவனித்து வந்து, வீட்டைத் திறந்து பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்டப் பெண் அங்கிருந்து தப்பி, பெற்றோரிடம் வந்துள்ளார். உடனடியாக அவர்கள் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.