'நாய்களுக்காகவே ஒரு தனி மாளிகையை வைத்திருந்த பார்த்தா சட்டர்ஜி'

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, தனது நாய்களுக்காக மட்டுமே தனியாக ஒரு மாளிகையை வைத்திருந்ததாக மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகி குற்றம்சாட்டியுள்ளார்.
'நாய்களுக்காகவே ஒரு தனி மாளிகையை வைத்திருந்த பார்த்தா சட்டர்ஜி'

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, தனது நாய்களுக்காக மட்டுமே தனியாக ஒரு மாளிகையை வைத்திருந்ததாக மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகி குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில், தனியாக ஒரு சொகு மாளிகையை வைத்திருந்தார். அதில் அவரது நாய்கள் பராமரிக்கப்பட்டு வந்ததாகக் கூறும் மீனாஷி லேகி, இந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி மௌனமாக இருக்கிறார் என்று புது தில்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது லேகி கூறினார்.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சாட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22இல் தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள பாா்த்தா சாட்டா்ஜியின் நெருங்கிய நண்பரான நடிகை அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் ரெய்டு நடத்தினா். இந்த ரெய்டின்போது ஏராளமான நகைகளையும், ரூ. 20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக பாா்த்தா சாட்டா்ஜியும், அா்பிதா முகா்ஜியும் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் அவா்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவரும், நாடியா மாவட்டத்தைச் சோ்ந்தவருமான எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

ஆசிரியா் பணி நியமன விவகாரத்தில் தொடா்புடையவா்களாக கருதப்படுபவா்களின் குடியிருப்புகளில் கடந்த 22 ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியபோது, மாணிக் பட்டாச்சாா்யாவின் குடியிருப்பு வளாகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியா் பணி நியமன விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பாா்த்தா சாட்டா்ஜி, உடல்நலப் பரிசோதனைக்காக புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்ததால் செவ்வாய்க்கிழமை காலை அவா் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்லப்பட்டு, அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பார்த்தா சட்டர்ஜிக்கு தெரிந்த மற்றொரு நபர் மோனலிசா தாஷ், இவர் 2014ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், தற்போது இவர் பேராசிரியராக உள்ளார், அது மட்டுமல்ல, அவர்தான் பெங்காலி துறைத் தலைவராகவும் உள்ளார். அவரது பெயரில் மட்டும் 10 மாளிகை வீடுகள் உள்ளன. அதில் ஒரு மிகப்பெரிய சொகுசு மாளிகை. அது, பார்த்தா சட்டர்ஜியின் வளர்ப்பி நாய்கள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருவதற்காகவே உள்ளது எனறு லேகி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com