மங்களூருவில் மேலும் ஒரு இளைஞர் வெட்டிக் கொலை: 144 தடை உத்தரவு

மங்களூருவின் புறநகர் பகுதியில் மேலும் ஒரு இளைஞர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மங்களூருவில் மேலும் ஒரு இளைஞர் வெட்டிக் கொலை: 144 தடை உத்தரவு

மங்களூருவின் புறநகர் பகுதியில் மேலும் ஒரு இளைஞர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சூரத்கல், முல்கி, பாஜ்பே மற்றும் பனம்பூர் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சூரத்கல், கிருஷ்ணாபுரா கடிபல்லா சாலை அருகே நேற்றிரவு 8 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பலால்  23 வயது இளைஞர் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து, ஜூலை 29-ம் தேதி ஆணையர்  எல்லைக்குள்பட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக மங்களூரு காவல் ஆணையர் என்.சசி குமார் கூறினார்.

சம்பவத்தின் போது நேரில் கண்ட சாட்சி அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஜூலை 26-ல் தட்சிண கட்டனத்தில் பிரவீன் நெட்டாரு என்ற இளம் பாஜக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com