சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஒடிஸாவில் 21 அமைச்சர்கள் பதவியேற்பு!

ஒடிசாவில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 21 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

News image
Updated On :5 ஜூன் 2022, 10:23 am

DIN


ஒடிசாவில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 21 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

2024-இல் வரவுள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலுக்காகக் கட்சியைப் பலப்படுத்த முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை ராஜிநாமா செய்தது. இதைத் தொடர்ந்து, இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் என இரண்டும் கலந்து உள்ளன.

புவனேஸ்வரில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மொத்தம் பதவியேற்றுக்கொண்ட 21 அமைச்சர்களில் 13 பேர் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். 5 பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டதில், 3 பேர் கேபினட் அமைச்சர்கள். கடந்த முறை கேபினட் அந்தஸ்தில் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி கடந்த மே 29-ம் தேதியுடன், 3 ஆண்டுகால ஆட்சியைக் கடந்து 4-ம் ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.