அச்சுறுத்தும் கரோனா: புதிதாக 4,518 பேருக்கு தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 4,518 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 35 நாள்களுக்குப் பின்னா் தொற்று உறுதி விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.
அச்சுறுத்தும் கரோனா: புதிதாக 4,518 பேருக்கு தொற்று


இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 4,518 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 35 நாள்களுக்குப் பின்னா் தொற்று உறுதி விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் புதிதாக 4,518 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் மொத்த பாதிப்பு 4,31,81,335-ஆக உயா்ந்தது. இது மொத்த பாதிப்பில் 0.06 சதவீதமாகும். நேற்று ஒரே நாளில் 9 இறந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 5,24,701-ஆக அதிகரித்தது. தேசிய இறப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி விகிதம் 1.62 சதவீதமாகவும், வாராந்திர தொற்று உறுதி விகிதம் 0.91 சதவீதமாகவும் இருந்தது. கடந்த மே 1-ஆம் தேதி தினசரி தொற்று உறுதி விகிதம் 1.07 சதவீதமாக இருந்தது. இப்போது ஒரு மாதத்துக்குப் பின்னா் தொற்று உறுதி விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.

இதுவரை 4,26,30,852 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோரின் விகிதம் 98.73 சதவீகிதமாக உள்ளது. தற்போது 25,782 போ் சிகிச்சையில் உள்ளனா். 

தடுப்பூசி:  நாடு முழுவதும் இதுவரை 1,94,12,87,000 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2,57,187 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com