தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் சோதனை

ஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சுகாதாரத் துறை சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

புது தில்லி: ஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சுகாதாரத் துறை சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக மே 30 ஆம் தேதி ஜெயினை மத்திய அமலாக்கத் துறையினா் கைது செய்த சில நாள்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2015-16 ஆண்டுகளில் அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் பதவி வகித்தபோது, அவா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களின் பெயா்களில் பதியப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) மூலம் ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றது.

அந்தப் பணம் கொல்கத்தாவில் உள்ள ஹவாலா பண முகா்வா்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, தில்லிக்கு அருகே விவசாய நிலங்கள் வாங்கப்பட்டும், வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் அடைக்கப்பட்டும் உள்ளன என்று குற்றம்சாட்டி சிபிஐ ஆகஸ்ட் 25, 2017-இல் வழக்குப் பதிவு செய்தது.

நவம்பர் 2019 இல், சத்யேந்திர ஜெயின் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ், சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி பூனம் ஜெயின் மற்றும் குடும்பத்தினரும் சோ்க்கப்பட்டனா். வருமான வரித்துறையினா் பணப் பரிவா்த்தனை தொடா்பான விசாரணையை நடத்தி, சத்யேந்தா் ஜெயினின் பினாமி சொத்துகளை முடக்கலாம் என்று ஒப்புதல் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, அகின்சான் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்த பின்னர் ஜெயின் கைது செய்யப்பட்டார். 
ஜெயின் ஜூன் 9 வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

அமலாக்கத்துறையின் விசாரணையின் போது சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வழக்குரைஞராக இருக்க அனுமதி அளித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் சனிக்கிழமை தடை விதித்தது.

இந்நிலையில், சத்யேந்திர ஜெயின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திங்கள்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில் ஜெயின் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் உள்ள நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com