இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது: ராகுல் ட்வீட்

இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது என்று காங்கிரஸ் மக்கள் உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி


இஸ்லாமிய இறைத் தூதா் முகமது நபி (ஸல்) குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தித் தொடா்பாளா்கள் கருத்து தெரிவித்தது தொடர்பாக அரபு நாடுகள் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

முகமது நபி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுா் சா்மா, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்ட கட்சியின் தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன்குமாா் ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்நிலையில், முகமது நபி குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஈரான், கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகள் இந்திய தூதரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தூதர்களை அழைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்ததுடன், இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டர் பக்க பதிவில், “வெறுப்பு வெறுப்பை மட்டுமே வளர்க்கும். அன்பும் மற்றும் சகோரத்துவமும் நிறைந்த பாதை மட்டுமே இந்தியாவை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இது இந்தியாவை ஒன்றிணைக்கு நேரம்” என்று #BharatJodo (இந்தியாவை ஒன்றிணைப்போம்) என்ற ஹேஷ்டேக்குடன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com