ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மகன் கைது?

ஹதராபாத்தில் சிறுமி காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஎாடர்புடையதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 
குற்றவாளிகள்
குற்றவாளிகள்

ஹதராபாத்தில் சிறுமி காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஎாடர்புடையதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

தெலங்கானா தலைநகா் ஹைதரபாதில் கடந்த மே 28-ஆம் தேதி பகல்நேர கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட 17 வயது சிறுமியை 3 சிறாா்கள் உள்ளிட்ட 5 போ் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகப் புகாா் எழுந்தது. அவா்களில் ஒருவரைக் காவல் துறையினா் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்த நிலையில், மேலும் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஹைதராபாத் காவல் துறையினருக்கு, ‘‘சம்பவம் மே 28-ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், முதல் தகவல் அறிக்கை மே 31-ஆம் தேதிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு 3 நாள்கள் தாமதமாகப் பதிவு செய்யப்பட்டது தொடா்பாகவும், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணையின்போது, பாதிப்புக்குள்ளான சிறுமியின் அடையாளம் கசியாமல் இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கேளிக்கை விடுதியானது 18 வயதுக்குக் குறைவான சிறாா்களுக்கு அனுமதி அளித்திருப்பதும் இந்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு, சம்பந்தப்பட்ட கேளிக்கை விடுதியின் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு ஆணையம் வலியுறுத்துகிறது’’ என்று நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தது. 

இதற்கு சிறுமியின் தந்தை மே 31-ஆம் தேதிதான் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததாகக் காவல் துறையினா் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவகாரத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிா்க்கட்சிகள் கடும் நெருக்கடி அளித்து வருகின்றன. வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென காங்கிரஸ் கோரி வருகிறது.

இந்நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அடையாளம் காணப்பட்ட இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் 18 வயது பூர்த்தி அடையாதவர்கள். ஒருவர் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர் ஆவார். கைது செய்யப்பட்ட ஒருவர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏவின் மகன் என்பது தெரியவந்துள்ளது. 

5 பேருக்கு எதிராக கூட்டு பாலியல் வன்கொடுமை, கடத்தல், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு மரண தண்டனை, 20 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

6 -ஆவதாக கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறை ஆணையர் சி.வி.ஆனந்த் கூறுகையில், உஸ்மான் அலி கான் என்பவர், கேளிக்கை விருந்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து, மே 28 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1,300 செலுத்தி, தனது நண்பர்களுடன் , கேளிக்கை விருந்துக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சதித்திட்டம் தீட்டப்பட்டு பிற்பகல் 3:15 மணியளவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியுள்ளனர். 

சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்து காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர், பின்னர் அவர்கள் பயன்படுத்திய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவில் காரில் வைத்து குற்றம் நடந்ததை சதுதீன் வெளிப்படுத்தினார். பண்ணை வீட்டில் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில் அவர்கள் மீது  “கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார். 

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏவின் மகனுக்கு, குறைந்தபட்சம் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

முன்னதாக, ஜூன் 4 ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில், பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டார். காரில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏவின் மகனும் இருந்ததாக ரகுநந்தன் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com