நூபுர் சர்மா குறித்து விடியோ வெளியிட்ட யூடியூபர் கைது

பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் உருவ பொம்மையின் தலையினை துண்டிப்பது போன்று விடியோ வெளியிட்ட காஷ்மீர் யூடியூபர் கைது செய்யப்பட்டார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் உருவ பொம்மையின் தலையினை துண்டிப்பது போன்று விடியோ வெளியிட்ட காஷ்மீர் யூடியூபர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, “ காஷ்மீரை மையமாக வைத்து யூடியூப் சேனல் நடத்தி வரும் ஃபைசல் வானி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் விடியோ வெளியிட்டுள்ளார்.” எனக் கூறியுள்ளனர்.

முன்னதாக, யூடியூபர் ஃபைசல் இன்று (ஜூன் 11) அந்த விடியோவைத் தனது சேனலில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், அவரது சேனலிலேயே அவர் மன்னிப்புக் கேட்கும் விடியோவையும்  வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் ஃபைசல் வானி பேசியிருப்பதாவது, “ பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா குறித்து நேற்று (ஜூன் 10) வெளியிட்ட விடியோ இந்தியா முழுவதும் வைரலானது. அதனால், என்னைப் போல அப்பாவி இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் மற்ற மதங்களில் உள்ளவர்களின் உணர்வுகளை காயப்படுத்த நினைக்கவில்லை. நான் அந்த விடியோ பதிவினையும் நீக்கி விட்டேன். இந்த விடியோவையும் நீங்கள் வைரலாக்குவீர்கள் என நம்புகிறேன். அதன் மூலம், நான் அந்த விடியோவை பதிவிட்டதை நினைத்து வருந்துவது அனைவருக்கும் தெரியும்” எனப் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com