குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த மம்தா ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த மம்தா ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும்பொருட்டு அதுகுறித்து ஆலோசனை நடத்த மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி, ஏற்பாடு செய்துள்ள கூட்டம் தில்லியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். 

இதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மம்தா பானர்ஜி, 'இன்று பல கட்சிகள் வந்திருந்தன. அனைத்துக் கட்சிகளுக்கும் ஒருமித்த வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த வேட்பாளருக்கு அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குவார்கள். இதுகுறித்து மற்றவர்களுடன் கலந்தாலோசிப்போம். இது ஒரு நல்ல ஆரம்பம். பல மாதங்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்தோம், அதை மீண்டும் செய்வோம்' என்றார். 

அதுபோல பொது வேட்பாளரை முடிவு செய்வது குறித்து மீண்டும் கூடி பேசுவோம் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்தார். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுத்துவிட்டதாகவும் கூறினார். 

முன்னதாக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க எதிா்க்கட்சி தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சிபிஐ (எம்) பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 22 கட்சித் தலைவா்களுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அண்மையில் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com