அசாம், மேகாலயாவில் கனமழையால் கடும் சேதம்

அசாம் மற்றும் மேகாலயாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அசாம், மேகாலயாவில் கனமழையால் கடும் சேதம்

அசாம்: அசாம் மற்றும் மேகாலயாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அசாமின் தமுல்பூர் மாவட்டத்தில் இன்று பல ஆறுகளின் வெள்ளப்பெருக்கத்தால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது.

அசாமில், ஜூன் 15 அன்று, இடைவிடாத மழையால், டிஹிங் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தது. இதன் விளைவாக, ஜூன் 15 அன்று பக்சா மாவட்டத்தில் உள்ள சுபன்காட்டா பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இடைவிடாத பெய்த மழையினால் ஆறுகளின் நீர்மட்டம் நிரம்பி, பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல கிராமங்களில்  வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்  கூற்றுப்படி, ஜூன் 15 வரை மாநிலத்தின் 18 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 75,000 பேர்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1731.18 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதற்கிடையில், இடைவிடாத கனமழை காரணமாக, மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் லும்ஷ்னாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையின்  சில பகுதிகள் பெரிதும் சேதமடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com