மேற்கு வங்கத்தில் நாளை பருவமழை தொடங்க வாய்ப்பு

மேற்கு வங்கத்தில் தென்மேற்கு பருவமழை நாளைக்குள் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
மேற்கு வங்கத்தில் நாளை பருவமழை தொடங்க வாய்ப்பு

மேற்கு வங்கத்தில் தென்மேற்கு பருவமழை நாளைக்குள் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

வங்காள விரிகுடாவில் இருந்து தென்மேற்கு திசையிலிருந்து பலத்த காற்று வீசுவதால், அடுத்த ஐந்து நாள்களில் இமயமலையின் துணை மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, கூச் பெஹார் மற்றும் அலிபுர்துவார் ஆகிய பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், மாநிலத்தின் அனைத்து வட மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமைக்குள் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்காள மாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும். இப்பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வியாழக்கிழமை கொல்கத்தாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் பகல் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com