அக்னிபத் திட்டத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு: இதுவரை 12 ரயில்கள் தீக்கிரை

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 12 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அக்னிபத் திட்டத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு: இதுவரை 12 ரயில்கள் தீக்கிரை
Published on
Updated on
1 min read

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 12 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். பின்னர் இந்த வயது உச்சவரம்பு 23-ஆக அதிகரிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.

அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. இதனிடையே அக்னிபத் திட்டத்துக்கு பிகார், உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் 3ஆவது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன. பேராராட்டக்காரர்கள், ரயில்களையும், ரயில் நிலையங்களையும் குறிவைத்து தீ வைத்து வருகின்றனர்.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 12 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 300க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 214 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, 11 ரயில்கள் திருப்பிவிடப்பட்டன எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளைஞர்கள் யாரும் வன்முறை போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.