சுவிஸ் வங்கியில் 50% அதிகரித்த இந்தியர்களின் கருப்புப் பணம்

சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகள் முதலீடு செய்த கருப்புப்பணம் 14 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சுவிஸ் வங்கியில் 50% அதிகரித்த இந்தியர்களின் கருப்புப் பணம்

சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகள் முதலீடு செய்த கருப்புப்பணம் 14 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகள் தங்களது சட்டவிரோத கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்து வருவது நாட்டின் முக்கியப் பிரச்னையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பது முக்கிய வாக்குறுதியாக அளிக்கப்படும் அளவிற்கு இந்தப் பிரச்னை நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 14 ஆண்டுகள் இல்லாத அளவு இந்தியர்கள் தங்களது கருப்புப்பணத்தை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2021ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் தனிநபர், கிளை நிறுவனங்கள் மற்றூம் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் இந்திய மதிப்பில் ரூ.30 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.20,700 கோடியாக இருந்த இந்தியர்களின் சுவிஸ் வங்கி கருப்புப்பணம் நடப்பாண்டு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சுவிஸ் வங்கியில் அதிகளவு முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், ஹாங்காங், லக்சம்பர்க், பஹாமாஸ், நெதர்லாந்து, கேமன் தீவுகள் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த வரிசையில் பாகிஸ்தான், வங்கதேசம், உள்ளிட்ட நாடுகளைப் பின்தள்ளி இந்தியா 44ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com