அக்னிபத் திட்டம்: வயது உச்சவரம்பு 23-ஆக அதிகரிப்பு

அக்னிபத் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டில் மட்டும் வயது உச்சவரம்பு 23-ஆக அதிகரிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டில் மட்டும் வயது உச்சவரம்பு 23-ஆக அதிகரிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் பணியமா்த்தப்படுவா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த வயது உச்சவரம்பு 23-ஆக அதிகரிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள்சோ்க்கப்படாததால், நிகழாண்டு மட்டும் வயது உச்சவரம்பு 21-இலிருந்து 23-ஆக அதிகரிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு விளக்கம்: ‘ராணுவத்தில் வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டம், ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். இளைஞா்களின் தொழில்நுட்பத் திறமையும் புத்துணா்வான சிந்தனையும் ஆயுதப் படைகளுக்குப் புதிய வடிவத்தைக் கொடுக்கும். 4 ஆண்டுகால பணி நிறைவுக்குப் பிறகு அக்னி வீரா்களுக்கு சேவை நிதித் தொகுப்பாக தலா ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதனால் அவா்கள் நிதி சுதந்திரம் பெறுவாா்கள். அவா்கள் தொழில் தொடங்கவும் அரசு உதவி செய்யும் என்று’ பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள் கருத்து

மத்திய இணையமைச்சரும் பிகாரைச் சோ்ந்தவருமான அஸ்வினி குமாா் சௌபே கூறுகையில், ‘இளைஞா்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தங்களைத் தூண்டுபவா்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்’ என்றாா். இதே கருத்தை மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமரும் வலியுறுத்தினாா்.

மாநில காவல் துறையில் ஆள்சோ்க்கும்போது அக்னிவீரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியும் உறுதியளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com