10ஆம் வகுப்புத் தேர்வில் 81% மதிப்பெண்: புற்றுநோய் பாதித்த மாணவி சாதனை

கரோனா தொற்றுக்கான பரிசோதனையின் போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் 81 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
10ஆம் வகுப்புத் தேர்வில் 81% மதிப்பெண்: புற்றுநோய் பாதித்த மாணவி சாதனை
10ஆம் வகுப்புத் தேர்வில் 81% மதிப்பெண்: புற்றுநோய் பாதித்த மாணவி சாதனை

தாணே: மகாராஷ்டிர மாநிலதைச் சேர்ந்த 15 வயது சிறுமி திவ்யா பாவலே, கரோனா தொற்றுக்கான பரிசோதனையின் போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் 81 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மகாராஷ்டிர கல்வித் துறை இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், திவ்யா 81 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் உள்பட பலரது முகங்களிலும் புன்னகையை மலரச் செய்துள்ளார்.

புனேக்கு அருகே வசித்து வரும் இந்த மாணவி, கரோனா பேரிடர் காலத்தில், அடிக்கடி சளி, காய்ச்சல் வந்ததால் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் அவருக்கு கரோனா இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து, அவருக்கு தீவிர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் கடந்த ஒன்பது மாதங்களில் தாணேவுக்கு பல முறை வந்து டாடா மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டுள்ளார். பல கீமோதெரபிகள், ரத்த மாற்றம், 15 முறை ரத்த தட்டணுக்கள் ஏற்றுதல் என பல சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே பத்தாம் வகுப்புத் தேவை எழுத வேண்டாம் என்று பெற்றோர் எவ்வளவு சொல்லியும் அவர் தான் படித்த பள்ளியில் தேர்வெழுதினார். தற்போது 81 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று அவரது பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியான நாளிலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com