அக்னிபத்: உச்ச நீதிமன்றத்தில் மனு

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அக்னிபத்: உச்ச நீதிமன்றத்தில் மனு


அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்கு ஆள்சேர்ப்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த நான்கு நாள்களாக இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் ரயில்களுக்குத் தீ வைக்கப்படுவது என பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் ஆகி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க அறிவுறுத்த வேண்டும். ரயில்வே உள்பட பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்.

இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து ஆய்வு நடத்த, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்."

அக்னிபத்:

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதிலிருந்து 21 வயதுக்கு உள்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டு பணிக்குச் சேர்த்துக் கொள்ளும் அக்னிபத் திட்டத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பனிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com