47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அக்னிபத்: தார்வாரில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி

அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :18 ஜூன் 2022, 12:37 pm

DIN

அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தின் தார்வார் மாவட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலா பவனில் ஒன்றுகூடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மாவட்ட கூடுதல் துணை ஆணையர் மனு ஒன்றைப் பெற்றார்.

போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் பேருந்து மீது கற்களை வீசினர். மேலும் அவர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. போராட்டக்காரர்கள் அனைவரையும் கலைக்க காவல்துறையினர் தடியடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் கலைந்து செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நான்காவது நாளாக சனிக்கிழமையும் நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.