அக்னிபத் போராட்டம்: நாடு முழுவதும் 529 ரயில் சேவைகள் ரத்து

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெறுவதையடுத்து, திங்கள்கிழமை 529 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
அக்னிபத் போராட்டம்: நாடு முழுவதும் 529 ரயில் சேவைகள் ரத்து

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெறுவதையடுத்து, திங்கள்கிழமை 529 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுதப் படையில் ஆள் சேர்ப்பு கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

வட இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக 100-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் மொத்தம் 529 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

529 ரயில்களில், 181 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 348 பயணிகள் ரயில்கள் ஆகும். 

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளது. 
போராட்டக்காரர்கள் ரயில்களை குறிவைத்து எரித்துள்ளனர். இதன் காரணமாக கடந்த ஐந்து நாள்களாக ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரயில் மறியல் போரட்டத்தைத் தடுக்கும் வகையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com