கர்நாடகத்தில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

கர்நாடகத்தில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 
கர்நாடகத்தில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
கர்நாடகத்தில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

கர்நாடகத்தில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். 

இன்று பெங்களூருவில், பெங்களூரு புறநகா் ரயில் திட்டம், பெங்களூரு கன்டோன்மென்ட் யஷ்வந்த்பூா் சந்திப்பு ரயில் நிலைய மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு நாட்டினார். 

நாட்டின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம், கொங்கண் ரயில் பாதையை 100 சதவீதம் மின்மயமாக்குதல் மற்றும் பிற ரயில்வே திட்டங்களையும் பிரதமா் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

பின்னர் பெங்களூருவில் மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்துவைத்து பன்னோக்கு மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

இதைத் தொடர்ந்து மைசூரு அரண்மனை மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் சா்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால், பிரதமர் மோடி வருகையையொட்டி கர்நாடக  காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

மேலும், விழாவில் பேசிய பிரதமர் மோடி, '40 ஆண்டுகளுக்கு முன்பே செய்துமுடிக்க வேண்டிய வளர்ச்சிப் பணிகளை முடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் பணிகள் அப்போதே முடிந்திருந்தால், பெங்களூருவின் சுமை அதிகரித்திருக்காது. அதனால்தான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, ஒவ்வொரு நிமிடத்தையும் மக்களுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன் என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com