அக்னிபத்: விமானப் படையில் சேர விண்ணப்பிப்பது எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் சேர்வதற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
அக்னிபத்: விமானப் படையில் சேர விண்ணப்பிப்பது எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அக்னிபத்: விமானப் படையில் சேர விண்ணப்பிப்பது எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புது தில்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் சேர்வதற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

அக்னிபத்திட்டத்தின் கீழ் சேர்க்கை குறித்த அறிவிக்கையை முப்படைகளில் இந்திய ராணுவம் நேற்று முதல் முறையாக வெளியிட்ட நிலையில், இந்திய விமானப்படை இன்று விண்ணப்பிக்கும் காலம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர விரும்புவோர், வரும் 24ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகிற 24ஆம் தேதி காலை 10 மணி முதல், ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விரும்புவோர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழை இணைக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூ.250-ஐ செலுத்த வேண்டும். அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர 1999,29 டிசம்பர் முதல் 2005ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாத இந்திய குடிமகன்களும், நேபாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். 

அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 24ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று விமானப் படை அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com