
ராஜஸ்தான் மாநிலத்தின் பல இடங்களில் பருவமழைக்கு முன்னதாகவே மழை பெய்ய தொடங்கியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி,
பிகானரில் உள்ள துங்கர்கரில் 11 செ.மீ மழையும், ஜலாவரில் உள்ள மனோகர்தளாவில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அஜ்மீரில் மசூதா, டோங்கில் நிவாய், ஜெய்ப்பூரில் உள்ள சாம்பார் மற்றும் சிகார் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கங்காநகர், ஹனுமன்கர், சித்தோர்கர், பில்வாரா, கோட்டா, தௌசா மற்றும் பாரான் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் பருவமழைக்கு முந்தைய மழை நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தனர்.
பிகானேர், கங்காநகர், ஹனுமன்கர் மற்றும் சுரு மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பருவமழைக்கு முந்தைய நடவடிக்கைகள் ஜூன் 22 முதல் குறையும், ஜூன் 23 முதல், அடுத்த மூன்று நாள்களுக்கு பெரும்பாலான இடங்களில் வானிலை முக்கியமாக வறண்டதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...