
புது தில்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்காக பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க | எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ
முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஆகியோர் புது தில்லியில் இன்று பிற்பகலில் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹ இன்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...