
முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திரிணமுல் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்த யஷ்வந்த் சின்ஹ, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, தேசிய நலன் கருதி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | யஷ்வந்த் சின்ஹ யார்? - முழு விவரம்
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹ பெயரைத் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க- குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு
இந்நிலையில், தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பா.ஜ.க. வேட்பாளர் யார்? தமிழிசையா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...
ஏற்கெனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் மருத்துவிட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...