தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா...  புதிதாக 13,313 பேருக்கு தொற்றுதிப்பு: 38 பேர் பலி

நாடு முழுவதும் புதன்கிழமை 12,249 ஆக இருந்த தொற்று பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,313-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா...  புதிதாக 13,313 பேருக்கு தொற்றுதிப்பு: 38 பேர் பலி

நாடு முழுவதும் புதன்கிழமை 12,249 ஆக இருந்த தொற்று பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,313-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 13,313 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,33,34,958-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 83,990 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 38 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,941 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 10,972 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,27,36,027-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,96,62,11,973 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 14,91,941 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்நிலையில், தில்லியில் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எய்ம்ஸ் இயக்குநா் ரண்தீப் குலேரியா, ஐசிஎம்ஆா் இயக்குநா் பல்ராம் பாா்கவா, தேசிய நோய்த்தடுப்பு மையத்தின் இயக்குநா் சுஜீத் சிங் ஆகியோா் கலந்துகொள்கிறாா்கள்.

மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலா் ராஜேஷ் எஸ்.கோகலே உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com