உதய்பூர் கொடூர கொலை அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல் காந்தி கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நிகழ்ந்த படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது. மதத்தின் பெயரிலான வன்முறைகளை ஏற்க முடியாது என  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கண்டனம்
உதய்பூர் கொடூர கொலை அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல் காந்தி கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நிகழ்ந்த படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது. மதத்தின் பெயரிலான வன்முறைகளை ஏற்க முடியாது என  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரா் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

உதய்பூா் தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருப்பவா் கன்னையா லால். இவா் அண்மையில் இஸ்லாம் குறித்து சமூக வலைதளத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் அவரை உள்ளூா் போலீஸாா் கைது செய்து பின்னா் ஜாமீனில் விடுவித்தனா்.

இந்த நிலையில், கன்னையா லாலின் கடைக்கு செவ்வாய்க்கிழமை 2 போ் வந்தனா். அதில் ஒருவா் கன்னையா லாலின் கழுத்தை கூா்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தாா். அவா் கொலை செய்யப்பட்டதை மற்றொருவா் கைப்பேசியில் படம் பிடித்து அந்த விடியோவை உடனடியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

அதில், இஸ்லாத்தை அவமதித்த காரணத்தால் கன்னையா லாலை பழிதீா்த்தாக அவா்கள் குறிப்பிட்டனா். மேலும், பிரதமா் மோடிக்கும், பாஜகவிலிருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுா் சா்மாவுக்கும் அவா்கள் மிரட்டல் விடுத்தனா்.

இந்தப் படத்தை பரவலாகப் பகிரவும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

தையல்காரா் கொலை செய்யப்பட்டதை அறிந்த உதய்பூா் வியாபாரிகள், அதற்கு காரணமானவா்களை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில் உதய்பூர் கொடூர கொலை அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், உதய்பூரில் நடந்த கொடூர கொலையால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரிலான வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை விரட்டுவோம். மேலும், அனைவரும் சகோதரத்துவத்தையும் அமைதியையும் கடைப்பிடிக்க ராகுல் காந்திவேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com