மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

மகாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை வியாழக்கிழமை(ஜூன் 30) மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். 
மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

மகாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை வியாழக்கிழமை(ஜூன் 30) மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். 

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென அந்த மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரிடம் பாஜக தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மனு அளித்தாா்.

சிவசேனைக்கு ஆதரவளித்து, தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள சுயேச்சை எம்எல்ஏக்கள் 8 போ், உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வழிவகை செய்யுமாறு தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாகவும் இதன் அடிப்படையில் அவா் ஆளுநரை சந்தித்து தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை வியாழக்கிழமை(ஜூன் 30) மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கான மகாராஷ்ர சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. 

ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவில் சந்தித்த நிலையில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com