
மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க உள்ள சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணியளவில் பதவியேற்பார் என்று ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். சிவசேனை மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிக்க: பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நன்றி: ஏக்நாத் ஷிண்டே
முன்னதாக, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
இந்நிலையில், கோவாவில் தங்கியிருக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்கள் அவர் முதல்வராகும் செய்தியை அறிந்ததும் மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டாடினர்.
#WATCH | Eknath Shinde-faction MLAs, staying at a hotel in Goa, celebrate following his name being announced as the Chief Minister of Maharashtra. pic.twitter.com/uJVNa4N74g
— ANI (@ANI) June 30, 2022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...