பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நன்றி: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க உள்ள சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர ஃபட்னவீஸ்
ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க உள்ள சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணியளவில் பதவியேற்பார் என்று ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். சிவசேனை மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

முன்னதாக, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது. இந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து வரும் ஏக்நாத் ஷிண்டே “சிவசேனையைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 50 எம்எல்ஏக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் உதவியால்தான் இந்தப் போரில் ஈடுபட்டோம். இந்த 50 பேரும் என் மீது வைத்த நம்பிக்கையை ஒரு துளி கூட சிதைக்க விடமாட்டேன். பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வர் பதவியை ஏற்காமல் தாராள மனப்பான்மையுடன் பாலாசாகேப்பின் ஊழியனான என்னை முதல்வராக்கியுள்ளார். அவருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com