
நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 14,506 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,819 ஆக அதிகரித்துள்ளது. 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 14,506 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 18,819 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,34,52,164-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 99,602 இல் இருந்து 1,04,555 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.24 சதவீதமாக உள்ளது.
தொற்று பாதித்தவர்களில் புதிதாக 39 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,25,116 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.
இதையும் படிக்க | ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்!
கரோனாவில் இருந்து 13,827 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,28,22,493-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.55 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,97,61,91,554 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 14,17,217 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...