கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

News image
ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Updated On :30 ஜூன் 2022, 4:36 am

DIN


ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. 

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் ரூ 118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப் பட்டது. இந்த புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Story image

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை பார்வையிடும் முதல்வர் மு. க. ஸ்டாலின். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

 
இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி, எ.வ. வேலு, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆற்காடு ஈஸ்வரப்பன், அணைக்கட்டு நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முதல்வரின் விழா பாதுகாப்புகளை தமிழக காவல்துறை தலைவர் தலைமையில், இரண்டு டிஐஜி மேற்பார்வையில், 4 எஸ் பிக்கள் உள்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.