
ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தாடிமரி அருகே கொண்டம்பள்ளியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதில், ஆட்டோவில் இருந்து 8 பேரும் உடல்கருகி இறந்தனர்.
விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்தபோது இந் த விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | உள்ளாட்சி இடைத்தேர்தல்: அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...