மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் இவரா..?

மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னாவில் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் இவரா..?


மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

அதனைத்தொடர்ந்து சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டார். 

இதனை எதிர்த்து சிவசேனை தலைமைக் கொறாடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உள்பட்டது என்றும் வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

சட்டப்பேரைவயில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை. எனவே, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதோடு, எனது சட்ட மேலவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். பதவியை ராஜிநாமா செய்வதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் எந்தவித பிரச்னையுமின்றி மாநிலம் திரும்புவதற்கு சிவசேனை தொண்டா்கள் அனுமதிக்கவேண்டும். அவா்களுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், மகா விகாஸ் அகாடி அரசுக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்ததற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோருக்கு உத்தவ் தாக்கரே நன்றியும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் ராஜிநாமாவை அடுத்து பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து இன்று வியாழக்கிழமை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனவும், அப்போது தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதத்தை பட்னாவிஸ் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனைத்தொடர்ந்து ஆட்சி அமைக்க பட்னாவிஸூக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது. 

இதையடுத்து நாளை வெள்ளிக்கிழமை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் முத்லவ்ராக பதிவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com