
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகை அளிக்கும் திட்டத்தை முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இன்று தொடக்கிவைத்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஹிமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற 75வது ஹிமாசல் தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மாநில பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கான பேருந்துக் கட்டணம் 50 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
தொடர்ந்து, கடந்த மே மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மேலும் 360 புதிய பேருந்துகளும் வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு 50% மட்டுமே கட்டணச் சலுகைத் திட்டத்தை முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இன்று தொடக்கிவைத்தார். நாளை முதல் மாநிலம் முழுவதும் இன்று அமல்படுத்தப்படவுள்ளது.
ஹிமாசலில் உள்ள அரசுக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பேருந்து டிக்கெட் கொடுத்து திட்டத்தை தொடக்கிவைத்தார்.
மேலும், மாநிலத்தில் அனைவருக்குமான குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் ரூ. 7-லிருந்து ரூ. 5 ஆகக் குறைக்கப்படும் திட்டத்தையும் இன்று தொடக்கிவைத்தார்.
அதுபோல அரசுப் பேருந்துகளில் 25 புதிய பெண்கள் ஓட்டுநராக நியமிக்கப்படுவதாகவும் கூறி முதல் பெண் டிரைவருக்கு வாழ்த்து கூறி சேவையை தொடங்கிவைத்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...