காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிட தயார்: மம்தா பானர்ஜி

பாஜகவை வெல்ல தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடத் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

தேர்தலில் பாஜகவை வெல்ல காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடத் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வென்றுள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் அவர்களுடன் இணைந்து போட்டியிடத் தயார்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ’தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள். பாஜகவின் வெற்றி அவர்களுக்கே பெரிய இழப்பாக அமையும். வாக்கு எந்திரத்தில் முறைகேடுகள் நடந்திருக்கலாம். சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அந்த வாக்கு எந்திரங்களை தடவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், இந்த முறை  அகிலேஷ் யாதவின் வாக்கு வங்கியும் 20 %லிருந்து 37%-மாக அதிகரித்துள்ளது’ என்றதுடன், பாஜகவை எதிர்த்து போராட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நடக்க வேண்டும். காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருவதால் இனி அதை நம்பி இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com