காங்கிரஸ் தலைவராகிறாரா ராகுல்?: காங். செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தில்லியில் முதல்முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் தலைவராகிறாரா ராகுல்?: காங். செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை
காங்கிரஸ் தலைவராகிறாரா ராகுல்?: காங். செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை


5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தில்லியில் முதல்முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து  விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொள்ள வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. இதனை சக உறுப்பினர்களை ஏற்கச்செய்ய செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 மாநிலத் தேர்தல் தோல்வியால், காங்கிரஸ் கட்சியில் முழுமையாக சீர்திருத்தங்களை செய்ய செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றும் தெரிகிறது.

இதோடு மட்டுமல்லாமல், 2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அது குறித்தும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. 

இந்தக் கூட்டத்தில் கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com