நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது பகுதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைந்தது.
இந்நிலையில், இரண்டாவது பகுதி கூட்டத்தொடா் இன்று தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா். அதன் மீதான விவாதமும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக, கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் கூடி செயல்பட்டன. தற்போது கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருகின்றன.
கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதம் நடைபெற்றது. உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு இரு அவைகளிலும் விளக்கமளித்தாா். அதையடுத்து அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தொடரின் 2-ஆவது பகுதியின்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? பிரேமலதா நாளை ஆலோசனை

ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

காங்கிரஸும் கம்யூனிச கட்சிகளும் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறது : கேரள பாஜக
சிரி... சிரி... 22-03-2026
வீடியோக்கள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

