ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சிரி... சிரி... 22-03-2026

சமையல் காஸ் தட்டுப்பாட்டை எப்படிச் சமாளிக்கிறாய்?

News image
Updated On :22 மார்ச் 2026, 10:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

'சமையல் காஸ் தட்டுப்பாட்டை எப்படிச் சமாளிக்கிறாய்?'

' பச்சைக்காய்கறிகள் சாப்பிட்டுத் தான்..!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'கத்தி சாணைப் பிடிச்சுத் தர்றட்டுமா?'

'ஏன் கத்தாம சைலன்ட்டா பிடிச்சுத் தர்ற முடியாதா?'

-தீபிகா சாரதி, சென்னை.



'கடிகாரக் கடைக்கு வேலைக்குப் போனீயே... ஏன் நின்னுட்டே?'

'நேரம் சரியில்லை!'

-ஜி. சுந்தரராஜன், திருத்தங்கல்.



'தூக்க மாத்திரை போட்டுக் கூடவா தூக்கம் வரல?'

'ஆமாம், தூக்க மாத்திரையை இருட்டுல கீழே போட்டுட்டேன்!'

-வி.சாரதி டேச்சு, சென்னை.



'ஏன் உங்க வீட்டு வாசல்ல திருடன் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு நிக்கறீங்க?'

'நான் வளர்க்கிற நாய் குரைச்சு விரட்டுதான்னு செக் பண்றேன்!'



'மொபைலை முழுங்கிட்டீங்களா... எப்படி?'

'தொண்டையை செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுத்தான், டாக்டர்!'

-எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.

'என்ன சர்வர்... தோசையில செடி முளைச்சிருக்கு?'

'சார், இது முளை கட்டின தோசை... செஞ்சு மூணு நாள் ஆச்சு!'

-எம்.பி.தினேஷ், கோவை.



'தாலாட்டுப் பாடியும் குழந்தை தூங்கல...'

'அப்புறம்?'

'அவரை பார்த்துக்கச் சொல்லிட்டு நான் தூங்கிட்டேன்!'



'ஷாக் டிரீட்மென்ட் கொடுக்கவா?'

'என்ன ஷாக்... கரன்ட் ஷாக்கா டாக்டர்?'

'பில் ஷாக்!'



'வடைக்கு எந்த எண்ணெய் யூஸ் பண்றீங்க?'

'நிச்சயமாக கச்சா எண்ணெய் இல்லை... தைரியமா சாப்பிடுங்க!'



'வெளியே கிளம்பும் போது என்னைப் பார்த்து ஏன் கும்பிடு போடுறே?'

'தும்மல் போடாம இருந்ததுக்கு நன்றி சொல்றேன்.'



' காபிக்கு ஒரு தடவை தாங்ஸ் சொல்லிட்டு மீண்டும் எதற்காக இன்னொரு தாங்ஸ்?'

'இது அடுத்த காபிக்கு அட்வான்ஸ் தாங்ஸ்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'சமயோசிதமாகப் பாடுவதில் கைத்தேர்ந்தவர் இப்புலவர்!'

'எப்படிச் சொல்கிறீர்?'

'போருக்கு முந்தி என்றால் விருத்தப்பாவும், போருக்குப் பிறகு என்றால் வருத்தப்பாவும் பாடுவார்!'



'தூங்கறவங்களை எழுப்பறது மகாபாவம்னு நினைக்கிறவர் நம்ப மானேஜர்!'

'அதுக்காக, நான் தூங்கினேன்னு என்னை ஆபீசுக்குள்ளேயே வச்சு பூட்டிட்டு வீட்டுக்குக் கிளம்பறது

எந்தவிதத்துல சார் நியாயம்?'



'நீ ஏன் உன்னைவிட அதிகமா படிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டே?'

'குறைவா படிச்ச பொண்ணே கிடைக்கலை, சார்!'

'சரி, நீ என்னதான் படிச்சிருக்கே?'

'ஆறாங்கிளாஸ் முடிச்சிருக்கேன், சார்!'



'உங்க பையன் சாப்பிடத்தான் சார் லாயக்கு!'

'ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?'

'பிரயாணின்னு எழுதச் சொன்னா, 'பிரியாணி'ன்னு எழுதறான், சார்!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.