
கோப்புப்படம்
உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உஜ்வாலா எரிவாயு உருளை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இரண்டு எரிவாயு உருளைகளை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இது எந்த விதமான மதம் சார்ந்த பண்டிகைகளையும் முன்வைத்து வழங்கப்படாது என்றும், மிகவும் புகழ்பெற்ற பண்டிகைகளான ஹோலி மற்றும் தீபாவளிக்கு முன்னதாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, ஆண்டு தோறும் சுமார் 1.65 கோடி பயனாளர்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் ஜனவரி - மார்ச் மற்றும் ஆக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வழங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. காலநிலை மாற்றம் நம்மை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு..
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுத்துள்ள நிலையில், இந்த திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிட்டு வென்ற பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இந்த இலவச எரிவாயு உருளை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் மாநில அரசு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.