மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு: வெடிபொருளை ஆன்லைனில் வாங்கியது அம்பலம்

குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு, அந்த வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருள்களை அவர் ஆன்லைனில் வாங்கியிருப்பதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு: வெடிபொருளை ஆன்லைனில் வாங்கியது அம்பலம்

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மங்களூரு விமான நிலையத்தின் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை வைத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு, அந்த வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருள்களை அவர் ஆன்லைனில் வாங்கியிருப்பதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த விசாரணைக் குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், குற்றவாளி ஆதித்யா ராவ் (37) வெடிகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்களை அவர் ஆன்லைனில் பொருள்களை விற்கும் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் வெடிகுண்டை தயாரிப்பது எப்படி என்பதையும், மிகவும் புகழ்பெற்ற இணையதளத்திலிருந்து குற்றவாளி அறிந்து கொண்டதையும் குற்றப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மங்களூரு விமான நிலையத்தின் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை காவலர்கள் கண்டெடுத்து, அதனை 1 கி.மீ தூரத்தில் உள்ள மைதானத்தில் வெடிக்கச் செய்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட மங்களூரு பஜ்பே விமான நிலையத்தின் அருகே பை ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்துள்ளது.

தகவலின்பேரில் காவலர்கள், வெடிகுண்டு நிபுணா்களுடன் உடனடியாக விரைந்து வந்து, அந்தப் பொருளைச் சோதனை செய்தனா்.

சோதனையில் அது வெடிகுண்டு எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அதனைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, வாகனம் மூலம் கெஞ்சூரு பகுதியில் உள்ள மைதானத்துக்குக் கொண்டு சென்று வெடிக்கச் செய்தனா். இதனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அங்கு பெரும் பதற்றம் நிலவியது. வெடிகுண்டுவைக் கண்டெடுத்து, அதனை பாதுகாப்பாக வெடிக்கச் செய்ததால், பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் வெளியீடு:

சம்பவத்தன்று காலை 10 மணியளவில் ஆட்டோவில் தொப்பி அணிந்து வந்த நடுத்தர வயது மனிதா் ஒருவா், விமான நிலையத்துக்குள் செல்லும் சாலையில் பை ஒன்றை வைத்துச் சென்றதும், அந்த பையில்தான் வெடிகுண்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆட்டோ மற்றும் அந்த நபரின் புகைப்படங்களை காவலர்கள் வெளியிட்டனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி ஆதித்யா ராவ் கைது செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி, பெங்களூரு விமான நிலைய பாதுகாப்பு கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது அவர் 7,500 ரூபாய் காப்புத் தொகைக் கட்ட வேண்டும் என்று சொல்ல, அவரால் அந்தப் பணியில் சேர முடியாமல் போனது.

இதையடுத்து, அவர் விமான நிலையத்துக்கும் ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்ட, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்த அவர், மீண்டும் விமான நிலையத்திற்குள் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ய முயன்றபோது சிக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com