
கோப்புப்படம்
பக்வாரா: பக்வாராவின் புறநகரில் உள்ள பக்வாரா-ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த ஓட்டுநர் அயூப் (40) மற்றும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள லேஹல் கலான் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் பிரேம் குமார் (32) விபத்தில் பலியானதாக சதர் காவல் நிலைய அலுவலர் ஜதீந்தர் குமார் தெரிவித்தார்.
சாலையோரத்தில் வாகனத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் மீது கார் மோதியதில் இறந்ததாக காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.
நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் லாரியின் கிளீனர் பலத்த காயமடைந்தார்.
இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்று காவல் நிலைய அலுவலர் கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...