60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி: கூடுதலாக இருந்தால் அகற்றப்படும் -நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். 
மக்களவையில் நிதின் கட்கரி
மக்களவையில் நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். 

இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மக்களவையில் இன்று (மார்ச் 22) பேசிய எம்.பி. திருமாவளவன், தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். 

இதனை அடுத்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலை விதிகள் 2008 சட்டப்படி 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்கலாம். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும். 

மேலும், 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும். அந்த தொலைவிற்குள் இன்னொரு சுங்கச்சாவடி இருந்தால் அவை அடுத்த மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படும்.

மேலும், சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ளவர்கள் அடிக்கடி கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில், ஆதார் அட்டையை காண்பித்தால் அவர்கள் சாவடியைக் கடக்க ’பாஸ்’ வழங்கப்படும் என்று கூறினார். 

விதிகளை மீறிய சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்ற அறிவிப்பால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 சுங்கச்சாவடிகள் மூடப்பட வாய்ப்புள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் ரூ.7000 கோடி மதிப்புள்ள சாலைத் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், சோஜிலா சுரங்கத்தில் ஆயிரம் மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

தில்லி - அமிர்தசரஸ் - கட்ரா (ஜம்மு காஷ்மீர்) பகுதிகளை இணைக்கும் சாலைகளுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிவடையும். இதன்மூலம் ஸ்ரீநகரிலிருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக 20 மணிநேரத்தில் பயணிக்க முடியும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com