கிராமப்புற வளர்ச்சித் திட்டம்: தமிழகத்தில் இதுவரை 657 பேருக்கு வீடுகள்

பிரதமரின் கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 35,051 பயனாளிகள் கண்டறியப்பட்டு 657 பேருக்கு வீடுகள் அளிக்கப்பட்டுள்ளது:  அமைச்சர் நாராயண் சாமி
கிராமப்புற வளர்ச்சித் திட்டம்: தமிழகத்தில் இதுவரை 657 பேருக்கு வீடுகள்

பிரதமரின் கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 35,051 பயனாளிகள் கண்டறியப்பட்டு 657 பேருக்கு வீடுகள் அளிக்கப்பட்டுள்ளதாக     சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயண் சாமி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று (மார்ச் 22) கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நாராயண் சாமி, பிரதமரின் கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வருடங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களை சுட்டிக்காட்டினார். 

கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 24 மாநிலங்களில் 18,22,858 பயனாளிகள் கண்டறியப்பட்டனர். அதில் அதில் 3,31,053 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

வீடுகள் ஒதுக்கீட்டிற்காக 1,36,776.50 லட்சம் ரூபாய் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது. இதில் 50,045.77 லட்சம் ரூபாயை மாநிலங்கள் செலவிட்டுள்ளன. 

தமிழகத்தில் 35,051 பயனாளிகள் கண்டறியப்பட்டு 657 பேருக்கு வீடுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு 5,042.80 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டதில் 990.28 லட்சம் ரூபாயை தமிழகம் செலவிட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com