
தில்லியில் எம்எல்ஏ பதவி ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்கிறார் ராகவ் சத்தா
பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக தேர்தல் அலுவலரும், பேரவைச் செயலருமான சுரீந்தர் பால் அறிவித்துள்ளார்.
பஞ்சாபில் காலியான 5 மாநிலங்களவை இடங்களுக்கு ஆம் ஆத்மி போட்டியிட்டது. ஆம் ஆத்மி வேட்பாளர்களாக ஹர்பஜன் சிங், அசோக் மிட்டல், ராகவ் சத்தா, சந்தீப் பாதக், சஞ்சீவ் அரோரா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சண்டீகரில் உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இதையும் படிக்க | உபி முதல்வராக நாளை (மார்ச் 25) பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளில் எந்தவொரு வேட்பாளரும் வேட்புமனுவைத் திரும்பப் பெறவில்லை. இந்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக தேர்தல் அலுவலரும், பேரவைச் செயலருமான சுரீந்தர் பால் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் 8 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாபிலிருந்து தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்கள் யார்?
- ஹர்பஜன் சிங் - முன்னாள் கிரிக்கெட் வீரர்
- அசோக் மிட்டல் - லவ்லி ஃபுரோஃபஷனல் பல்கலைக்கழக நிறுவனர்
- ராகவ் சத்தா - ஆம் ஆத்மி எம்எல்ஏ
- சந்தீப் பாதக் - இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன (ஐஐடி) பேராசிரியர்
- சஞீச்வ் அரோரா - தொழிலதிபர்